மழை காலத்தில் துணிகள் பராமரிப்பு - இதோ டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

கல் உப்பை ஒரு பிடி எடுத்துக் மெல்லிய துணியில் கட்டி அறையின் ஒரு ஓரத்தில் கட்டி தொங்கவோ அல்லது ஒரு தட்டிலோ வைத்து விடுங்கள். இரண்டு நாளுக்கு ஒரு முறை உப்பை மாற்றி புது உப்பு வையுங்கள்.

காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிந்துகொள்ளும்.

ஒரு பாத்திரத்தில் வெள்ளை வினிகரை ஊற்றி அறையில் ஒரு ஓரத்தில் வையுங்கள். மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

அறையின் ஜன்னல்களை சாத்திவிட்டு ஒரு பாத்திரத்தில் கற்பூரம் வைத்து ஏற்றி கதவு மற்றும் ஜன்னல்களை மூடி சிறிது நேரம் விட்டு விடவும்.

தண்டுடனான வேப்பிலை கொத்தை எடுத்து துணிகள் வைக்கும் அலமாரியில் வையுங்கள். இது துணிகளில் பூஞ்சைபிடிக்காமல் தடுக்கும். இதனால் துணிகளில் கெட்ட வாடை போய்விடும்.

துவைக்கும் போது வெந்நீரில் ஊறவைத்தும் கசக்கலாம். துணிகளுக்கு பயன்படுத்தும் ஃபேப்ரிக் கண்டிஷனர், போன்றவைப் பயன்படுத்தலாம்

ஒரே நேரத்தில் அதிக துணிகளை துவைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக துவைத்துக் மின்விசிறிக்குக் கீழ் உலர்த்தலாம்.

பெரும்பாலும் ஏசி இருக்கும் அறையில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இந்த அறையில் மின்விசிறிக்குக் கீழ் துணிகளை உலர விடலாம். ஆனால் ஈரத்துணிகள் இருக்கும் போது ஏசி பயன்பாட்டைத் தவிர்க்கவும்.