ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் ஐஸ் கட்டி உருவாகினால் அதை கரைப்பதே பெரும் வேலையாக இருக்கும் இதை எளிதில் கரைக்கலாம். ஒரு உருளைக்கிழங்கை நீளவாக்கில் இரு பாதியாக வெட்டவும் இரு பாதியின் உள் பகுதியையும் கத்தியை வைத்து ஆங்காங்கே கீறி விடவும் பின் கீறி விட்ட பகுதி முழுவதும் தூள் உப்பை தடவிக் கொள்ளவும் ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து விட்டு, இந்த உருளைக்கிழங்கை கொண்டு ஐஸ் கட்டி மீது தேய்த்து விடவும் இப்போது ஐஸ் கட்டி உருகி வரும். இரண்டு பாதியை கொண்டும் தேய்த்தால் முழுவதும் உருகி வந்து விடும் இதை வாரத்திற்கு இரு முறை செய்தால் ஃப்ரீசரில் ஐஸ் கட்டி சேராது