முட்டையை உப்பு கலந்த தண்ணீரில் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த முட்டைகளை காட்டன் துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும் இந்த முட்டைகளை 5 நிமிடத்திற்கு அப்படியே வைத்து விட வேண்டும் பின் இந்த முட்டைகளின் மீது எண்ணெய் தடவி முட்டை வைக்கும் பாக்ஸில் வைக்கவும் முட்டைகளை அடுக்கும் போது கூரான பகுதி கீழே இருக்குமாறு வைக்கவும் இந்த முட்டைகளை வெளியில் வைத்தால் 12 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ஃப்ரிட்ஜில் வைத்தால் 2 மாதம் வரையில் கெட்டுப் போகாமல் இருக்கும்