4 கப் இட்லி அரிசிக்கு ஒரு கப் உளுந்து ஊற வைத்து அரைக்கவும்



குறைந்தது 3 முறை கழுவி விட்டு இட்லி, உளுந்தை ஊற வைக்கவும்



உளுந்தை, அதை ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி அரைக்க வேண்டும்



அரை கப் அளவு ஜவ்வரிசியையும் ஊற வைத்து அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்



உளுந்தை மட்டும் ஃப்ரிட்ஜினுள் ஊற வைத்து அரைக்கலாம்



மாவை நன்றாக கரைத்து மூடி வைத்து விட்டு 8 மணி நேரத்திற்கு பின் இட்லி சுடவும்



இப்போது உங்களுக்கு இட்லி மிருதுவாகவும் நல்ல வெள்ளை நிறத்திலும் கிடைக்கும்