பிஸ்கட் நமத்து போச்சா? அதை தூக்கி போட வேண்டாம். மீண்டும் புதிதாக்கலாம்



அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மீது பட்டர் ஷீட்டை போடவும்



தீயை சிம்மில் வைத்து விட்டு, பட்டர் ஷீட்டின் மீது பிஸ்கட்டுகளை அடுக்கவும்



ஒன்றின் மீது ஒன்றாக வைக்க கூடாது. பிஸ்கட்டை பட்டர் ஷீட் கொண்டு மூடவும்



இப்போது ஒரு மூடியால் பிஸ்கட்டை மூடி இரண்டு நிமிடம் சூடாக்கவும்



மறுபுறம் திருப்பி விட்டு 2 நிமிடம் சூடாக்கவும். மீண்டும் ஒரு முறை திருப்பி விட்டு சூடாக்கவும்



அவ்வளவுதான் பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து பிரித்தது போன்று க்ரிஸ்பி ஆகிவிடும்