கோடையில் குடலை குளிர்ச்சியாக வைக்க டிப்ஸ்!

வெப்பநிலை அதிகரிக்கும் போது நீரிழப்பு ஏற்பட்டு குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்

புரோபயாடிக்குகள் நிறைந்த உணவு, சீரான குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

தயிர், கே ஃபர், கிமிச்சி, மோர், கொம்புச்சா ஆகிய உணவுகளில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் மலம் எளிதாக வெளியேறும்

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து நிறைந்து இருக்கும்

ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக காஃபி குடித்தால் வயிற்று எரிச்சல் ஏற்படும்

காஃபி குடிப்பதற்கு பதிலாக ப்ளாக் டீ, கிரீன் டீ, கொம்புச்சா போன்றவற்றை அருந்தலாம்

செரிமானம் சீராக இருக்க உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்

நிறைய தண்ணீர் குடிப்பதை தவிர தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்

அழற்சி எதிர்ப்பு பண்பை கொண்ட மஞ்சள் தூள், குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது