ஏலக்காய், இந்திய சமையலறையில் தவிர்க்க முடியாத மசால பொருட்களாக இருக்கிறது உணவிற்கு மணத்தையும் சுவையையும் சேர்க்கும் ஏலக்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன வீட்டில் ஏலக்காய் செடியை வளர்க்க முடியும். ஆனால் சற்று மெனக்கெட வேண்டும் ஏலக்காய் செடி சூடான, ஈரப்பதமான காலநிலையில் வளரும் ஏலக்காய் வளர குறைந்தது 23 டிகிரி - 10 டிகிரி செல்சியஸ் தேவைப்படும் ஏலக்காய் செடி கரிமப் பொருட்கள் நிறைந்த மண்ணில்தான் வளரும் களிமண் அல்லது மணல் மண்ணில் செடி வைத்தால் வளரவே வளராது ஏலக்காய் விதைகளை தண்ணீரில் அலசி, ஒரு இரவு முழுவதும் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும் மண்ணின் மேல் பகுதியில் 4 - 6 அடி இடைவெளியில் விதைகளை வரிசையாக வைக்க வேண்டும் விதைகளின் மீது கொஞ்சம் மண்ணை தூவி அதனை மூட வேண்டும். மண் ஈரமாகும் வரை தண்ணீர் விடவும் ஏலக்காய் வளர நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் நிறைந்த உரங்களை பயன்படுத்தலாம்