மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

Published by: பிரியதர்ஷினி

ஒவ்வொரு ஆண்டும் வெயில், மழை, பனி என வெவ்வேறு காலங்கள் மாறி மாறி வரும். இந்த காலங்களில் நம் உடல்நிலையும் மாறிக்கொண்டே இருக்கும்

குறிப்பாக மழைக்காலத்தில் பலவிதமான தொற்று நோய்கள் வரும். இதன் அபாயத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்

மழைக்காலத்தில் ஜீரண மண்டலத்தின் செயல்பாடு குறைந்துவிடும்

அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் வலுவும் குறைந்துவிடும்

இந்த காலத்தில் சாதம், தானியங்கள், ஊறுகாய், பருப்பு வகைகளில் சூப், தேன், மோர் ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்

சூடான காரமான பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இருப்பினும், வேகவைக்காத உணவுகள், சாலட் வகைகள், பதப்படுத்தப்பட்ட ப்ரோசன் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்

இவற்றை பின்பற்றினால் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்