காலையில் வாக்கிங் போகாமலே தினமும் 5000 ஸ்டெப்ஸ் நடக்க முடியும்! உட்கார்ந்து வேலை செய்யும் இடத்தில் இருந்து, அவ்வப்போது எழுந்து அங்கும் இங்கும் நடந்து பழகலாம் தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் போன் பேசும் போது உட்கார்ந்து கொண்டே பேசாமல், அங்கேயும் இங்கேயும் நடந்துக்கொண்டே பேசலாம் சைக்கிள் ஓட்டுவது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற செயல்களை செய்ய கொஞ்சம் நடக்க வேண்டியிருக்கும். இது ஒருவகையான பயிற்சியாக அமையும் லிஃப்ட், எலிவேட்டர் பயன்படுத்துவதற்கு பதில் படிக்கட்டுகளை பயன்படுத்தலாம் நீங்கள் செல்லும் இடங்களின் அருகினில் வண்டியை விடாமல், தொலைவில் வண்டியை பத்திரமாக பார்க் செய்து, அங்கிருந்து நடந்து செல்லலாம் உங்கள் வீட்டு செல்லப்பிராணியை தினமும் வாக்கிங் அழைத்து செல்லும் போது நீங்களும் அவற்றுடன் நடந்து பழகுங்கள் காலையோ, மாலையோ உங்களுக்கு வசதியான நேரத்தை வாக்கிங் செய்வதற்காகவே ஒதுக்குவது நல்லது. உங்களுடன் வாக்கிங் செல்ல நண்பர்களையோ, குடும்பத்தினரையோ அழைத்து செல்லலாம்