100 கிராம் குயினோவாவில் 4.4 கிராம் புரதம்,  1.9 கிராம் கொழுப்பு, 19.4 கிராம் மாவுச்சத்து, 2.8 கிராம் நார்ச்சத்து, 17 மில்லிகிராம் கால்சியம், 64 மில்லிகிராம் மெக்னீசியம் அடங்கியிருக்கிறது.



இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் குயினோவாவை டயட்டில் சேர்த்துகொள்கின்றனர்.



பட்டாணி, குயினோவாவை தண்ணீரில் ஊறை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறை வைத்துக்கொள்ள வேண்டும். 



வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கேரட்டை நீள வாக்கில் சிறியதாக நறுக்கவும். 



அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் நெய் ஊற்றி சீரகம், கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளாகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். 



வெங்காயம் நன்றாக வதங்கியதும் உப்பு, கேரட், பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். 



5 நிமிடங்கள் வதங்கியதும், இதோடு குயினோவா சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். 



நன்றாக கலந்து குக்கரை மூடி போட்டு மூடி 2-ல் இருந்து 3 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.



பிரஷர் போனதும் திறந்து நெய் சிறிதளவு ஊற்றி, கொத்தமல்லி தழைகள் ஊற்றி இறக்கவும். குயினோவா கிச்சடி ரெடி. 



உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், டயர் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல், ஆரோக்கியமாக இருப்ப விரும்புபவர்கள் இதை சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்..


Thanks for Reading. UP NEXT

பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது ஆபத்தா? ஆய்வு சொல்வதென்ன?

View next story