பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு பொருட்கள், புத்துணர்ச்சி பானங்கள், அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட டிரிங்க்ஸ், பாக்கெட்களில் கிடைப்பவை. அதை வாங்கி வீடுகளில் சூடு செய்தால் மட்டும் போதும். உணவு தயாராகிவிடும். - இப்படியான உணவுகள் பல தொழில்துறை செயல்முறைகளுக்கு உட்படுகின்றன. பெரும்பாலும் இதில் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. வையை அதிகரிப்பதற்காக நிறைய ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கொழுப்பு மற்றும்/அல்லது உப்பு அதிகமாக இருக்கும், ஆனால் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது. அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சில வகையான புற்றுநோய்கள்,இதயம், நுரையீரல் தொடர்பான நோய் பாதிப்புகள், மனநல பிரச்சனை உள்ளிட்ட 32 வகையான உடல்நல கேடுகளை விளைவிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆரோக்கியமான வாழ்வை வாழ, பதப்படுத்தப்பட்டதுரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.