குழந்தைகளை சிரமமில்லாமல் வளர்க்க டிப்ஸ்!

Published by: விஜய் ராஜேந்திரன்

மாறிவரும் உலகில், பெற்றோர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்

குழந்தைகளின் சிறுவயதில் பெற்றோர்கள் அவர்களின் உடல், மனம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்

குழந்தைகளின் அன்றாடத் தேவைகள், கல்வி, சமூக வாழ்க்கை, உடல்நலம் போன்ற பல விஷயங்களில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்

பெற்றோர்களுக்கு குடும்பப் பொறுப்புகள், வேலை என இருப்பதால் குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் போகிறது

சில குழந்தைகள் கவனக் குறைவாகவும், அளவுக்கு அதிகமாக சேட்டை செய்பவர்களாகவும் இருக்கலாம்

தங்கள் உணர்வுகளை உறவினர், நண்பர்கள், துணையிடம் பகிர்ந்தால் ஆறுதல் கிடைக்கும்

மன அழுத்தம் அதிகமானால் ஒரு மனோ தத்துவ நிபுணரை அணுகி உதவி பெறலாம்

மன அழுத்தத்தைக் குறைக்க யோகா தியானம் போன்றவற்றை செய்யலாம்

போதுமான அளவு தூங்குங்கள், உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபட்டால் மன அழுத்தம் குறையும்