சருமத்தை பராமரிப்பதில் ஆண், பெண் இருபாலருமே அதிக அக்கறை கொள்கின்றனர்

சருமத்தை எப்படி பராமரிப்பது என இணையத்தில் எக்கச்சக்க டிப்ஸ் நிறைந்துள்ளன

அதை தெரிந்துக்கொண்டு அழகிற்கு அழகு சேர்க்க நினைத்து அதை எல்லாம் செய்வார்கள்

இருப்பினும் மற்றவர்கள் சொல்கிறார்கள் என அனைத்து பொருட்களையும் பயன்படுத்த கூடாது

பார்க்கும் டிப்ஸ் அனைத்தையும் ட்ரை செய்தால் சிக்கல் ஏற்படும்

சிலருக்கு எண்ணெய் வடியும் சருமம், சிலருக்கு வறண்ட சருமம், சிலருக்கு இரண்டும் கலந்த காம்பினேஷன் சருமம் இருக்கும்

ஒவ்வொரு சரும வகைக்கும் ஒவ்வொரு பொருட்கள் செட்டாகும் சில பொருட்கள் செட்டாகாது

நீங்கள் வாங்கும் ஸ்கின் கேர் பொருட்களில் என்னவெல்லாம் இங்கிரடயன்ட்ஸ் இருக்கு என்பதை கவனியுங்கள்

எந்த பொருளாக இருந்தாலும் முதலில் கையில் தடவி பார்த்து பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்

எலுமிச்சை, காஃபித்தூள், பேஸ்ட், பேக்கிங் சோடா உள்ளிட்ட பொருட்களை எக்காரணம் கொண்டும் முகத்தில் பயன்படுத்த வேண்டாம்