இரவில் தூக்கம் சரியாக வரவில்லையா ? அப்போ இந்த மாதிரி செய்து பாருங்க இரவு 8 மணிக்கு மேல் டீ, காபி, மது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் இரவில் தூங்குவதற்கு முன் வெந்நீரில் குளிக்கலாம் தூங்குவதற்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன் வெதுவெதுப்பான பால் குடிக்கலாம் இரவில் நீண்ட நேரம் நல்ல தூக்கம் பெறுவதற்கு மாலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தூங்குவதற்கு முன் தொலைக்காட்சி பார்ப்பது, அலைபேசி பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் படுக்கை அறையை அமைதியான, இருட்டான சூழலில் வைத்திருப்பது மிகவும் அவசியம் இரவில் தூக்கம் வரவில்லை என்ற சிறிது நேரம் மென்மையான பாடல்களை கேட்கலாம் பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்கவும், தேவைப்பட்டால் 30 நிமிடம் தூங்கி கொள்ளலாம்