கர்ப்பிணிகளுக்கு முதுகு வலியை குறைக்க உதவும் டிப்ஸ்!

Published by: விஜய் ராஜேந்திரன்

எலும்பில் ஏற்படும் மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி மிகவும் இயல்பானது, ஏனெனில் கருப்பையின் விரிவடைவதால் இடுப்பு எலும்பில் ஏற்படும் மாற்றங்களால் வலி ஏற்படுத்தும்

கர்ப்பகால முதுகு வலி

கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு முதுகு வலி ஏற்படும். கர்ப்பத்தின் ஐந்து முதல் ஏழாம் மாதங்களில் வலியானது இருக்கும்

ரிலாக்ஸின் ஹார்மோன்

குழந்தை வளர எளிதாக இருக்கும் ரிலாக்ஸின் ஹார்மோன் முதுகெலும்பையும் தளர்த்துகிறது. முதுகு பகுதியில் உறுதியற்ற தன்மை மற்றும் வலியை ஏற்படுத்தும்

மன அழுத்தம்

மன அழுத்தமும் முதுகில் தசை இறுக்கத்திற்கு வழிவகுத்து முதுகு வலி ஏற்படலாம் எனவே யோகா , பாடல் கேட்பது, செடி வளர்ப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்

ஓய்வு

வீட்டில் இருக்கும் போது சரியாக அமர்வது, நடைப்பயிற்சி போன்றவை அவசியம். போதுமான நேரம் ஓய்வு எடுப்பது உங்கள் வலியை குறைக்க உதவும்

நீர் பேக் ஒத்தனம்

முதுகில் ஒரு சூடான அல்லது குளிந்த நீர் பேக் கொண்டு ஒத்தனம் கொடுப்பது முதுகு வலியை குறைக்க உதவுகிறது

உடற்பயிற்சி

மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம். இது உங்கள் முதுகெலும்பில் உள்ளஅழுத்தத்தை எளிதில் குறைத்து வலியை நீக்க உதவும்

நடப்பது நல்லது

நேராக உட்கார்ந்திருப்பதை தவிர, தலையணைகளை முதுகு பக்கத்தில் வைத்து அமர்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்காமல் சற்று எழுந்து நடப்பது நல்லது

மகப்பேறு பெல்ட்

மகப்பேறு பெல்ட் உள்ளாடை போன்றது, இது இடுப்பு மற்றும் கீழ் முதுகிற்கு ஒரு சப்போர்ட்டை கொடுக்கிறது. உங்களுக்கு கடுமையான வலி ஏற்பட்டால் இதனை பயன்படுத்தலாம்