குழந்தைகளிடம் அதிக கண்டிப்புடன் நடந்துகொள்வது நல்லதா?

Published by: ஜான்சி ராணி

குழந்தைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேம்பிரிட்ஜ் மற்றும் டப்ளின் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

அதில் அதிக கண்டிப்புடன் வளரும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஒன்றரை மடங்கு அதிகமாக மனநலம் பாதிக்கப்படுவதை கண்டறிந்துள்ளனர்.

மூன்று, ஐந்து மற்றும் ஒன்பது வயது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தின் அறி குறிகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.

10 சதவீதம் குழந்தைகள் மோசமான மனநலம் கொண்டவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

தண்டனைகள் கொடுப்பது போன்ற நடவடிக் கைகள் அவர்களை உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்குகிறது.

பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிக்கும்போது அவர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

கடுமையாக தண்டிக்கும் பெற்றோரிடத்தில் வளரும் குழந்தைகள் அதிக மன அழுத்தம் நிறைந்த சூழலில்தான் வாழ்கிறார்கள்.

கல்விக்காக பெற்றோர்கள் அதிக அழுத்தம் கொடுக்கும்போது, அது குழந்தைகளின் மன நலனை பாதிக்கிறது.

பெற்றோருக்கு பயந்து படிப்பது குழந்தைகளின் கல்வித்திறன் குறைவதற்கு வழிவகுக்கிறது

அதற்கு பதிலாக குழந்தைகள் தவறுகள் செய்யும்போது கனிவுடன் வழி நடத்தி அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.

அதற்கு பதிலாக குழந்தைகள் தவறுகள் செய்யும்போது கனிவுடன் வழி நடத்தி அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.

எதிர்மறையான அணுகுமுறையை மாற்றி ஆதரவு, ஊக்கம் மற்றும் நேர்மறையான தகவல்தொடர்பு ஆகியவற்றுடன் ஒழுக்கம் நிறைந்த நிறைந்த சூழலில் குழந்தைகளை வளர்ப்பது முக்கியம்.