பட்டாசு வெடிக்கும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

Published by: ஜான்சி ராணி

தீபாவளி என்றால் சந்தோஷம் தான். அதுவும் பட்டாசு என்றால் குதுாகலம் தான்.

, நம் ஆரோக்கியம்? பலருக்கு அந்த நேரத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்று காணலாம்.

ஸ்துமா, மூச்சிரைப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு, அவை இன்னும் அதிகமாகும்.

கவனமாக இருக்கவும். பட்டாசு வெடிக்க வேண்டாம். புகை பாதிப்பை ஏற்படுத்தும்.

மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் அரிப்பு, எரிச்சல் போன்றவை வரும். இதை தொடர்ந்து, 'இன்பெக்ஷன்' ஏற்பட்டு, தொண்டை கரகரப்பு வரும்.

இதை தற்காத்து கொள்ள, உடல், கோழையை அதிகமாக உற்பத்தி செய்யும். சளிப் பிடிக்கும்.

பட்டாசு வெடிக்கும்போது, வெளிவருகிற நைட்ரஜன் ஆக்சைடு, நுரையீரல்களின் உள்ளே இருக்கிற ‘லைனிங்குகளைச் சிதைத்துவிடும்.

அதனால், ஆக்சிஜனை உள்ளிழுப்பதில் கஷ்டம் ஏற்படும்.

பட்டாசு வெடிக்கும்போது எழும் சத்தம், ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு, பிரச்னையை மேலும் அதிகரிக்கும்.

கவனமாக இருக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் இடத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது.

பட்டாசு புகை நிக்கல் கலந்த புகையை சுவாசிப்பதால், குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை.

சிலருக்கு வாந்தியை வரவழைக்கும். மாங்கனீஸ் தூக்கமின்மை, படபடப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். பாஸ்பரஸ்

கவனமுடன் பட்டாசு வெடிக்க வேண்டும். சிறுவர்களை பெரியவர்கள் கண்காணிப்பு இல்லாமல் வெடி வெடிக்க அனுமதிக்க வேண்டாம்.

பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது.

மத்தாப்பு கொளுத்திய பிறகு, அதை வாளியில் உள்ள தண்ணீரிலோ அல்லது மண்ணில் தண்ணீர் ஊற்றிய இடத்தில் போடலாம்.

பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடலாம்.