ஹெல்தியான ஒயிட் சாஸ் பாஸ்தா ரெசிபி!

Published by: ஜான்சி ராணி

பாஸ்தா (பென்னே, ஸ்பிரிங் உங்கள் விருப்பத்திற்கேற்ப) -  250 கிராம்,பனீர்- 1 1/2 கப்

சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா ஒன்று

க்ரீம் - அரை கப்.,பூண்டு - 2 பல்,செர்ரி தக்காளி - அரை கப்

காலிஃபளவர் - ஒரு கப்,வேகவைத்த ஸ்வீட்கார்ன் - அரை கப்

துருவிய சீஸ் - ஒரு கப்,பால் - ஒரு கப்,

உப்பு -தேவையான அளவு,ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன் (தேவையான அளவு

பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும். தண்ணீர் ஒரு கொதி வந்தததும் சுத்தம் செய்த காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

காலிஃபளவர் வெந்ததும் வடிகட்டி ஆறவிடவும்.இப்போது மிக்ஸி ஜாரில் பனீர், காலிஃபளவர், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து அரைத்த விழுதை தனியே வைக்கவும்.

மிதமான தீயில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெண்ணெய் சேக்கவும்

பூண்டு, நறுக்கிய மூன்று வண்ண குடைமிளகாய், ஸ்வீட்கார்ன், கேரட், செர்ரி தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.. 

அவை வதங்கியதும் ஒயிட் சாஸ் சேர்க்கவும், .

இதில் ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், சீஸ், கொஞ்சம் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதில் பால், கொஞ்சம் க்ரீம், சீஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.

அவ்வளவுதான். கூடான பாஸ்தா தயார்.