தீபவாளி கொண்டாட்டத்திற்கு தயாராக வேண்டுமா?ஸ்கின் கேர் டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

ப ண்டிகை என்றால் பளிச் முகம் வேண்டும் என்றால் வீட்டிலேயே எளிய வகையில் செய்துக்கொள்ள ஃபேஷியல் டிப்ஸ்

முகத்தை குளிர்ந்த பாலால் நன்கு துடைத்து விட்டு கழுவிக் கொள்ள வும்.

உங்களின் 'எப்போது மான ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவிக் கொள்ளலாம்.

ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஏதேனும் ஒன்றுடன் சிறிது கற்றாழை ஜெல், கலந்து நன்கு மசாஜ் செய்யவும்.

உங்களுக்கு ஆயில் சருமம் எனில் கற்றாழை ஜெல் மற்றும் தயிர் கலந்து மசாஜ் செய்யலாம்

நடு முதுகு, கழுத்து. முகம் என 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவும்.

நீராவி

ரோஜா இதழ்கள் அல்லது செம்பருத்தி பூ இதழ்கள் கலந்து ஆவிப் பிடிக்கவும்.

சர்க்கரை எடுத்துக்கொள்ளவும், மிகவும் மென்மையான சருமம் எனில் கசகசா எடுத்துக்கொள்ளவும்.

இதனுடன் சிறிது தேன் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து ஸ்க்ரப் செய்யலாம்,

தயிர், கடலை மாவு, தேன், கஸ்தூரி மஞ்சள் கலந்து பேஸ்டாக மாற்றி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பளிச் சருமம் கிடைக்கும்.

ஐஸ் பேக்

ஐஸ் கட்டிகளை வைத்து ஃபேஸ் கிரப் செய்யலாம்.