வாழ்க்கையில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா

Published by: விஜய் ராஜேந்திரன்

எடுத்துக் கொண்ட வேலையைப் புரிந்து கொள்ள வேண்டும்

எடுத்துக் கொண்ட வேலையைப் புரிந்து கொள்ள வேண்டும். தெரியாத, அனுபவம் இல்லாத வேலையாக இருந்தாலும் ஆரம்பிக்கும் முன்பு சில முன் ஆய்வுகள் செய்ய வேண்டும்

கவனம் செலுத்த வேண்டும்

எதை நோக்கி நாம் செல்லப் போகிறோம் என்று தெரிந்த பின்னர், செயலில் முழுதாகக் கவனம் செலுத்த வேண்டும்

திறம்படச் செய்ய என்ன வழிகள்

செயலைத் திறம்படச் செய்ய என்ன வழிகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டும்

கவனம்

செயல்களைப் பிரித்துக் கொண்டு செய்வதால் கவனம் சிதறாமல் செய்ய முடியும்

கொண்டாட வேண்டும்

சின்ன சின்ன முன்னேற்றங்களைக் கொண்டாட வேண்டும். அது உங்களுக்குப் பிடித்த தித்திப்பைச் சாப்பிடுவதாகக்கூட இருக்கலாம்

மற்றவர்களுடன் ஒப்பீடு

எந்தக் காரணம் கொண்டும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். அது தேவையில்லாத மன உளைச்சலைத் தரும்

யோசித்து பார்க்க வேண்டும்

உங்கள் வேலையில் நடக்கும் முன்னேற்றத்தையும் பின்னடைவையும் அவ்வப்போது உட்கார்ந்து யோசித்து பார்க்க வேண்டும்

நம்பிக்கை இருக்க வேண்டும்

உங்கள் திட்டத்தின் மீது, ஆற்றல் மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டும். இலக்கை அடைய அவ்வப்போது திட்டங்களை மாற்றுவதால் பயனில்லை

மன அழுத்தம்

மன அழுத்தம் வருகிறதென்றால், உங்கள் செயல் முறையை மாற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்