பட்டுப்புடவை என்றென்றும் புதுசாக இருக்க இதை செய்யுங்க!
Published by: விஜய் ராஜேந்திரன்
பட்டுப் புடவை என்பது காலத்தால் அழியாத பொக்கிஷம். குளிர்ந்த காலநிலையில், அதன் இன்சுலேடிங் பண்புகள் உங்களை சூடாக வைத்திருக்க உதவும். இதை எப்படி துவைக்க வேண்டும் என்று பார்க்கலாம்...
உங்கள் வாளியில் குளிர்ந்த நீரை நிரப்பி பின்னர் உங்கள் பட்டுப் புடவையை உள்ளே ஊற வைக்க வேண்டும்
நன்றாக சுத்தம் செய்ய, ஒரு வாளி தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை வினிகரை சேர்த்து கலக்கலாம்
உங்கள் பட்டுப் புடவையை துவைக்கும் போது, உயர்தர திரவ சோப்பு அல்லது லேசான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்
பட்டு சேலைகள் துவைக்கும் போது அந்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறினை பிழிந்து விட்டு துவைத்தால் சாயம் போகாது
பட்டுப் புடவையை நேரடியாக சூரிய ஒளியில் காய வைக்க கூடாது நிழலில் காய வைக்க வேண்டும்
பட்டுப்புடவையை மடிக்கும்போது ஜரிகை கறை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்து போகாமல் நன்றாக இருக்கும்
பட்டுப் புடவையை முடிந்த அளவு கசக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்