வெண்மையான பற்கள் வேண்டுமா? இதை ட்ரை பண்ணலாமே! பலர் வெளிப்படையாக சிரிக்க முடியாமல் சிரமப்படுவதற்கு முக்கிய காரணம் பற்கள் மஞ்சளாக இருப்பதால்தான் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை நீக்க சில எளிய வழிகள் உள்ளது 1 ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி விரல்களால் பற்களில் தினமும் 2 முறை மசாஜ் செய்து வந்தால் 1 வாரத்தில் மஞ்சள் கறை நீங்கும் ஆரஞ்சு தோலை சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகருடன்(தண்ணீர் உடன் கலக்கப்பட்டது) கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்கள் வெண்மையாக வைக்கலாம் கடைகளில் விற்கப்படும் பற்பசையில் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா உள்ள பற்பசையை வாங்கி பயன்படுத்தலாம் புகையிலை, மதுப்பழக்கத்தை தவிர்த்து தினமும் 2 முறை கட்டாயம் பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாகவே இருக்கும் முன்குறிப்பிட்ட டிப்ஸ்களை பின்பற்றி வாருங்கள் நல்ல மாற்றம் தெரியும்