பெண்களே கல்யாணம் ஆகப்போதா? அந்நாளில் ஜம்முனு இருக்க இந்த டிப்ஸ் பொல்லொவ் பண்ணுங்க...

Published by: பிரியதர்ஷினி

ஆறு மாதங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதை திருமணம் ஆன பின்னரும் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்

திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், ஸ்கின் கேரை பின்பற்ற வேண்டும்

முகத்தை கழுவுவது மட்டும் ஸ்கின் கேர் அல்ல, அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. எக்ஸ்ஃபோலியேஷன், ஃபேஷியல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்

கடைசி மூன்று மாதங்களில் உங்களுக்கு ஒற்றுக்கொள்ளாத உணவுகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த பழக்கம் இந்த குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதிற்கும் உதவும்

உங்கள் வாழ்வில் நடக்கும் இந்த பெரிய நிகழ்வில் என்ன ஆபரணம் அணிய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு, வாங்கி வையுங்கள். கடன் வாங்குவதாக இருந்தால், எந்த கடையில் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்

திருமணம், வரவேற்பு விழாவிற்கு என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை ஒரு மாதத்திற்கு முன் முடிவு செய்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னர் ஸ்பாவில் புக்கிங் செய்து கொள்ளுங்கள். அத்துடன் மேக் -அப் கலைஞரிடம் அட்வான்ஸ் கொடுத்துவிடுங்கள். ஒரு மாதத்திற்கு முன்பே அவர்கள், அந்த குறிப்பிட்ட தேதியில் இருப்பார்களா அல்லது வேறு ஒருவர் புக் செய்துவிட்டாரா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்