வானியல் அதிசயம்; நாளை தோன்றும் சூப்பர் ப்ளூ மூன்! சுவாரஸ்ய தகவல்கள்!

Published by: பிரியதர்ஷினி

சூப்பர் மூன்கள் பொதுவாக வருடத்திற்கு 3-4 முறை நிகழ்கின்றன

இந்த அபூர்வமான வானியல் நிகழ்வை பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்

ஆகஸ்ட் மாதம் வரும் முழு நிலவுக்கு 'ஸ்டர்ஜன் மூன்' என்று பெயர். இந்த சூப்பர் மூன் ப்ளு ஆகஸ்டில் வருவதால் சூப்பர் ப்ளூ மூன் 'ஸ்டர்ஜன் மூன்' என்றும் அழைக்கப்படுகிறது

இந்த ஆண்டு தோன்றும் நான்கு சூப்பர் மூன்களில் முதலாவது,அடுத்த சூப்பர் மூன் நிகழ்வுகள் செப்டம்பர் 18, அக்டோபர் 17 மற்றும் நவம்பர் 15 ஆகிய தேதிகளில் வானில் தோன்றும்

ஆகஸ்ட் 19 அன்று தேதிக்குப் முன்னாலும் பின்னாலும் கூட சில நாட்கள் நிலவு அதிக வெளிச்சமாக இருப்பதை பார்க்கலாம்

வட அமெரிக்காவில் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை சுமார் மூன்று நாட்களுக்கு முழுமையாகத் தோன்றும்

ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலையில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றும்

இந்தியாவில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 20 அதிகாலை வரை பார்க்க முடியும். ஐரோப்பிய நாடுகளில் ஆகஸ்ட் 18 மாலை முதல் ஆகஸ்ட் 19 இரவு வரையும் பிறகு மீண்டும் ஆகஸ்ட் 20 அதிகாலையிலும் சூப்பர் ப்ளூ மூன் நிலவை பார்க்கலாம்