கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலை உயரும்போது, காய்ச்சல் தொற்றாக மாற வாய்ப்புள்ளது.



தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி (தாளம்மை) ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.



'பாராமைக்ஸோ வைரஸ்' எனப்படும், காற்றில் வேகமாக பரவக்கூடிய வைரஸ் தாளம்மை ஏற்பட காரணம்.



வைரஸ் உமிழ்நீர் சுரப்பிகளை தாக்குவதால், தாடை, கழுத்து, காது ஆகியவற்றில் வீக்கமும் வலியும் ஏற்படும்.



லேசானது முதல் தீவிர காய்ச்சல், தலைவலி, காது



வலி, தசை வலி, சோர்வு, பசியின்மை உள்ளிட்டவை அறிகுறிகள்..



இதற்கு குறிப்பாக சிகிச்சை எதுவும் இல்லை.



எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.



சுகாதாரம் பேண வேண்டியது அவசியம்.



இதை சமாளிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.