செடி பராமரிப்பு என்பது காலத்திற்கு ஏற்றவாறு மாறும்



செடிகளை மழைக் காலத்தில் ஒருவகையாக பராமரிப்போம்



வெயில் காலத்தில் அதன் பராமரிப்பு கொஞ்சம் மாறுபடும்



மழைக் காலத்தில் செடிக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இருக்காது



வெயில் காலத்தில் கட்டாயமாக இரண்டு வேலையும் தண்ணீர் ஊற்ற வேண்டும்



வெயில் வருவதற்கு முன்பு, மாலை வெயில் தணிந்த பிறகு தண்ணீர் ஊற்ற வேண்டும்



வெயில் காலத்தில் தண்ணீரை மதிய நேரத்தில் ஊற்றி விடக் கூடாது



வெப்பத்தின் காரணமாக மண் மிக சூடாக இருக்கும்



தண்ணீர் தெளிக்கும் பொழுது முடிந்த அளவுக்கு செடிகளின் மேல் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்



செடிகளின் மேல் தெளிப்பது என்றால் காலை நேரத்தில் தண்ணீர் ஊற்றலாம்



பூச்சி மருந்து தெளிப்பது போன்றவற்றை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளலாம்