மாதுளைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் வைட்டமின்கள் சத்துக்களை வழங்குவதுடன் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்.



கீரைகள், காய்கறி சாப்பிடலாம். அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிட கூடாது.



மோர் குடிப்பது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவும்.



எலுமிச்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.



தயிர் சாப்பிடுவதும் குடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.



புதினா புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுவதுடன் வெப்பநிலையை சீராக்கும் திறனையும் கொண்டுள்ளது.



இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்கள் வியர்வில் வெளியேறு சத்துக்களை மீட்டெடுக்க உதவும்.



வெள்ளரிக்காய் உடலில் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். தினமும் டயட்டில் வெள்ளரிக்காய் சேர்த்து கொள்ளலாம்.



தர்பூசணி, நீர்ச்சத்து அதிகமும் உள்ள பழம் என்று எல்லாரும் அறிந்ததே.



தேங்காயை உணவில் சேர்ப்பதுடன் அதை தனியாக சாப்பிடலாம். ஜூஸ் உடன் சேர்த்து அருந்தலாம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.