மன அழுத்ததை நிர்வகிக்க சிலவற்றை பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் சொல்கின்றனர். மன அழுத்தம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தியானம் - மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க தியானம் செய்யலாம். நேர மேலாண்மை -தினமும் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு நேரத்திற்குள் முடிக்கவும். போதுமான அளவு தூங்குவது மன அழுத்தத்தை தடுக்கும். ஆரோக்கியமான, உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சின்ன சின்ன டாஸ்க் முடித்தாலே பெரிய இலக்குகளை அடையலாம். Slow down. தினமும் நீங்கள் செய்து முடித்ததை மன திருப்தியுடன் நன்றியுடன் நினைத்து பாருங்க.