மனிதனின் மூன்று அத்யாவசிய தேவைகளுள் ஒன்று உறைவிடம்.
குடும்பமும் மகிழ்ச்சியான தருனங்களும் அங்கிருந்தே தொடங்குகின்றது.
அங்கு கரப்பான் பூச்சிகள், பல்லிகள் மற்றும் பிற பூச்சிகள் நம் வீடுகளில் புகுந்து தொல்லை கொடுக்கும்.
இவை வீடுகளில் சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு நோய்கள் பரப்பவும் காரணமாகின்றன.
வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருந்தால் பூச்சிகள் வருவதை தடுக்க முடியும்.
உணவுகளை காற்று புகாத பாத்திரங்களில் சேமித்து வைக்கவும். பூச்சிகள் அதிகம் உணவு மற்றும் தண்ணீரில் தான் உற்பத்தியாகின்றன.
பூச்சிகளை விரட்ட செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள். வேப்பிலை, துளசி, வினிகர், எலும்பிச்சை போன்றவை பூச்சிகளை விரட்ட உதவும்.
வீட்டில் தண்ணீர் கசிவுகள் அல்லது அசுத்தமான தண்ணீர் போன்றவை இருந்தால் உடனை அவற்றை சரிசெய்யுங்கள்.
வீட்டில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். அவை பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கும் வளர்ச்சிகும் உதவும்.