abp live

சமையல் அறையில் உதவும் ஹாட் க்ளவுஸ்!

abp live

மைக்ரோவேவ் Ovenல் பயன்படுத்தும் போது அதை பாதுகாப்பாக கையாள்வதற்கு Mitt உதவும். இந்த கையுறைகளை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

abp live

பயன்படுத்தாத பழைய ஜீன்ஸ் அல்லது ஏதேனும் கனமான துணியை எடுத்து அதை இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். பின்பு உங்கள் கைகளை துணியின் மீது வைத்து, பெருவிரல் தவிர மற்ற 4 விரல்களையும் சேர்த்து வைத்தாற்போல அவுட்லைன் வரைந்துக் கொள்ளுங்கள்.

Published by: ஜான்சி ராணி
abp live

அதில் இருந்து ஒரு அங்குல அளவு அதிகமாக அளந்து துணியை வெட்டிக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கை அளவுகொண்ட 2 துண்டுதுணிகள் கிடைக்கும்.இந்த அளவைக் கொண்டு ஒரு பருத்தித் துணியின் மீது வரைந்து, இதே அளவில் 10 துண்டுகள் வெட்டிக் கொள்ளுங்கள்.

Published by: ஜான்சி ராணி
abp live

இப்போது ஒரு ஜீன்ஸ் துணி துண்டுடன், 5 பருத்தித் துணி துண்டுகள் வீதம் 2 செட்களாக தனியே பிரிக்கவும்.

abp live

பின்னர் ஒரு செட் துணிகளை எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, அவற்றின் மேலே நடுப்பகுதியில் சாய்வாக ஒரு தைக்கவும்.

abp live

அதை போலவே குறுக்கும், நெடுக்குமாக கட்டங்கள் போட்டதுபோல தைக்க வேண்டும்.

abp live

இதை போலவே மற்றொரு செட் துணிகளையும் தைத்துக்கொள்ளுங்கள். இப்போது தைத்து வைத்துள்ள கை வடிவிலான இரண்டு துணிகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக உள்பக்கமாக வைத்து, சுற்றிலும் கை வடிவிலேயே தைத்து எடுக்கவும்.

abp live

இரண்டையும் இணைத்து துணியை வெளிப்பக்கமாக மாற்றி எடுத்தால், கையுறை தயார்.

abp live

உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.