அடிப்பிடித்த பாத்திரத்தில் அடிப்பிடித்த பகுதி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும்



இதில் அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் வினிகர் சேர்க்கவும்



இப்போது இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைக்கவும்



தண்ணீர் சூடானதும், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஒரு ஸ்பூன் சேர்க்கவும்



இப்போது கரண்டியால் நன்றாக அடிப்பிடித்த இடத்தை சுரண்டி விட வேண்டும்



இப்போது பொங்கி வரும். தொடர்ந்து லேசாக சுரண்டி விட்டு அடுப்பை அணைத்து விடவும்



தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, கம்பி நாரால் லேசாக தேய்த்து கழுவினால் பாத்திரம் பளீச்சென மாறிடும்