உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேத மருத்துவத்தின் பரிந்துரைகள் சில!

Published by: ஜான்சி ராணி

உடல் எடை அதிகமாக இருந்தால், ஆரோக்கியத்திற்காக மட்டுமே உடல் எடையைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

தொடர்ந்து செய்யும் சில மாற்றங்கள் மூலம் உடல் எடை குறைக்கும் பயணத்தை எளிதாக மாற்றலாம்.

தேன் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது என்கின்றது ஆயுர்வேத மருத்துவம். எலுமிச்சை சாறு தேன் சேர்த்து குடிப்பது, க்ரீன் டீ தேன் சேர்த்து குடிப்பது ஆகியவற்றை செய்வதன் மூலம் உடல் எடையை நிர்வகிக்கலாம்.

இது கபம் என்று சொல்லப்படுவதை சீராக இருக்க உதவுவதால் உடல் எடையை குறைக்க உதவும். 

மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருப்பது நாம் அறிந்ததே.

இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். அதிகமாக உள்ள கபத்தை குறைக்க மஞ்சள் உதவும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கிறது. 

. உடல் எடையை நிர்வகிப்பதற்கும் இது உதவும்.

ஆயுர்வேத மருத்துவத்தின் படி, வாதம் கபம், பித்தம் ஆகிய மூன்றையும் சீராக வைக்க உதவும் திறன் நெல்லிக்காய்க்கு உண்டு

இஞ்சி செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும். குடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும்.

ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படும்.

ஒரு சிறிய துண்டு அளவில் இஞ்சி சாப்பிடுவது கபத்தை சீராக இருக்க உதவும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.

பார்லி ஆயுர்வேத மருத்துவத்தின் படி உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

பார்லி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.