அடிக்கடி சோப்பு போட்டு முகம் கழுவினால் என்னாகும் தெரியுமா?
Published by: விஜய் ராஜேந்திரன்
சோப்பு போன்ற ரசாயனங்கள் மூலம் அடிக்கடி முகத்தையோ உடலையோ கழுவும்போது அது மென்மையான சருமத்தை பாதிக்கிறது
சோப்பு போன்ற ரசாயனங்கள் முகம், மற்றும் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை சுரண்டி எடுத்து விடும்
சோப் சருமத்தின் மேல் உள்ள உற்பத்தி துளைகளை அடைக்கிறது. இதன் விளைவாக முகப்பரு ஏற்படுகிறது
அதிகமாக சோப்பு போடும் போது அது முகத்தில் உள்ள கொலாஜன்களை சிதைத்து விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும்
அதிகமாக சோப்பு போட்டுவிட்டு, வெளியில் செல்லும்போது சூரிய ஒளி பட்டால் முகத்தில் சுருக்கங்களும் மெல்லிய கோடுகளும் ஏற்படலாம்
மேக்கப் போட்டுக்கொள்வோர் அதை அகற்ற சோப்பு போட்டு முகம் கழுவலாம். அதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் வைத்து மேக்கப்பை அகற்றிவிட வேண்டும்
சிலர் முகத்தை கடினமான துண்டால் அழுத்தி தேய்ப்பார்கள் அது மிகவும் தவறு. ஈரத்தை மென்மையாக ஒற்றி எடுத்தாலே போதுமானது
முகத்திற்கு சோப்பு போடும்போது கீழிருந்து மேலாக மசாஜ் செய்வது போல மென்மையாக போட வேண்டும்
அதிகமாக சோப்பு போட்டால் முகம் பளபளப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு, தேவையான தண்ணீர் குடித்து, பழங்கள் சாப்பிட்டு, சத்துள்ள உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்