அழகுக்கு வைத்துக்கொள்ளும் மருதாணியில் இவ்வளவு நன்மை இருக்கா? மருதாணி வைப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்கள் உள்ளங்கைகளும், உள்ளங்கால்களும் தான். உடலில் உள்ள அத்தனை நரம்புகளின் பிரதிபலிப்பு அங்கே உள்ளது இரத்த ஓட்டம் சீராகி இதய படபடப்பு, இரத்த அழுத்தம் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த உதவும் வெவ்வேறு பிரச்சனைகளால் வரும் டென்ஷனை குறைக்கிற குணம் மருதாணிக்கு உண்டு மருதாணி இலைக்கும் சரி, பூவுக்கும் சரி நமக்கு ஆழ்ந்த தூக்கத்தை தரும் சக்தி உண்டு இரவில் தூக்கம் வராதவர்கள் மருதாணி பூங்கொத்தை தலையில் வைத்து கொள்ளலாம் நீரிழிவு இருப்பவர்கள் மருதாணி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்து கட்டை விரலில் தொடர்ந்து வைத்து வரலாம் சிலருக்கு மருதாணி இட்டு கொண்டால் சளி பிடிக்கும். அதனால் மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அறைக்கலாம் தீக்காயம் பட்ட இடத்தில் மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால் காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்மை மற்றும் வலி குறைந்து காயம் சீக்கிரம் ஆறும் மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசிவர விரைவில் கருந்தேமல் மறையும்