கற்றாழையில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த மாய்ஸரைஸராக இருக்கிறது
கற்றாழை குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. இதை முகத்தில் தேய்க்கும் போது சருமத்தின் மேல் ஒரு பாதுகாப்பை உருவாக்கி முகத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது
கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க உதவுகிறது. மேலும் சிலருக்கு பருக்களால் உண்டாகும் வீக்கம், முகம் சிவத்தல் போன்றவற்றையும் குறைக்கிறது
சிலருக்கு வெயிலில் செல்லும்போது முகம் எரிச்சல் அடைய ஆரம்பிக்கும். இதுபோன்ற எரிச்சலை கற்றாழை தணிக்கிறது
கற்றாழையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, இ உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தின் இயற்கைத் தன்மையையும் நெகிழ்ச்சியையும் மேம்படுத்த உதவுகிறது
கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கறைகள் நீங்குமாம்
கற்றாழையின் சாற்றை கண்களுக்கு அடியில் தடவினால் அதன் குளிர்ச்சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் கருவளையத்தை போக்கிவிடும்
கற்றாழையில் இயற்கையான என்சைம்கள் உள்ளன. அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி மிருதுவான பொலிவான நிறத்தை தருகிறது
கற்றாழையை தோல் சீவி அதன் ஜெல்லை உச்சந்தலையில் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது அரிப்பை குறைத்து பொடுகை குறைத்து முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஜெல்லை ஒரு கிண்ணத்தில் எடுத்து இயற்கையாக முகத்தின் ஒப்பனையை நீக்கலாம். இது சருமத்தை சுத்தமாகவும் நீரேற்றம் ஆகவும் மாற்ற உதவும்