சருமத்தை பளபளப்பாக்கும் டீடாக்ஸ் வாட்டர்கள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

எலுமிச்சை மற்றும் வெள்ளரி டிடாக்ஸ் வாட்டர்

தேவையான பொருட்கள் : 1 எலுமிச்சை (வெட்டப்பட்டது),1 வெள்ளரி (வெட்டப்பட்டது),1 லிட்டர் தண்ணீர்

1 லிட்டர் தண்ணீரில் எலுமிச்சைத் துண்டுகள் மற்றும் வெள்ளரித் துண்டுகளைச் சேர்க்கவும்

இரவில் குளிர்சாதன பெட்டியில் வைத்து, மறுநாள் காலை குடிப்பதற்கு முன் தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்

இஞ்சி மற்றும் புதினா டிடாக்ஸ் வாட்டர்

தேவையான பொருட்கள் : 1 அங்குல துண்டு இஞ்சி,10 புதினா இலைகள்,1 லிட்டர் தண்ணீர்

1 லிட்டர் தண்ணீரில் இஞ்சித் துண்டுகள் மற்றும் புதினா இலைகளை சேர்க்க வேண்டும்

8 மணி நேரம் அல்லது ஒரு இரவு குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் காலை குடிப்பதற்கு முன் தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்

ஸ்ட்ராபெரி, கிவி மற்றும் துளசி டிடாக்ஸ் வாட்டர்

தேவையான பொருட்கள் : 10 ஸ்ட்ராபெர்ரிகள் (வெட்டப்பட்டது), 2 கிவி (துண்டுகள்), 5 துளசி இலைகள், 1 லிட்டர் தண்ணீர்

1 லிட்டர் தண்ணீரில் ஸ்ட்ராபெர்ரி, கிவி மற்றும் துளசி இலைகளை சேர்க்க வேண்டும்

ஒரு இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைத்து வடிகட்டி குடிக்கவும்

தர்பூசணி, புதினா டிடாக்ஸ் வாட்டர்

தேவையான பொருட்கள் : 1 கப் தர்பூசணி (வெட்டியது), 6-7 புதினா இலைகள், 1 லிட்டர் தண்ணீர்

1 லிட்டர் தண்ணீரில் தர்பூசணி க்யூப்ஸ், புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை துண்டுகளை சேர்க்க வேண்டும்

குளிர்சாதன பெட்டியில் சில மணிநேரம் அல்லது ஒரு இரவு குளிர்சாதன பெட்டியில் வைத்து வடிகட்டி குடிக்கவும்

புளுபெர்ரி மற்றும் லாவெண்டர் டிடாக்ஸ் வாட்டர்

தேவையான பொருட்கள் : 1 கப் புளுபெர்ரி, உலர்ந்த லாவெண்டர் 1 தேக்கரண்டி,1 லிட்டர் தண்ணீர்

1 லிட்டர் தண்ணீரில் புளுபெர்ரி மற்றும் லாவெண்டர் சேர்க்க வேண்டும்

சில மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் வடிகட்டி குடிக்கலாம்