வெறும் வயிற்றில் காபி குடிச்சா என்ன பிரச்சினை வரும் தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

அமிலத்தன்மை

வெறும் வயிற்றில் காபி அருந்தும் போது உங்கள் செரிமான அமைப்பைத் தூண்டி அமில அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது

காபியில் உள்ள காஃபின் இரைப்பையில் அமில சுரப்பை தூண்டுகிறது. இது நெஞ்செரிச்சல், வீக்கம், ஏப்பம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கலாம்

செரிமான பிரச்சனை

காலையில் காபியை முதலில் குடிப்பது உங்கள் இயற்கையான செரிமான செயல்பாட்டை பாதிக்கலாம்

பதட்டத்திற்கு வழிவகுக்கிறது

வெறும் வயிற்றில் காஃபின் உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து, உங்கள் மனநிலையையும், கவனத்தையும் பாதிக்கலாம்

உங்கள் நாளை அமைதியாகவும் சீரானதாகவும் வைத்திருக்க காலை உணவுக்கு பின்னர் கூட காபி அருந்தலாம்

இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது

காலை நேரத்தில் காபி அருந்துவது உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் ஒரு மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்

வெறும் வயிற்றில் காபி குடிப்பதால், திடீரென குளுக்கோஸ் குறையும், உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம்

ஊட்டச்சத்தை உறிஞ்சுதல் பாதிப்புகள்

காலை உணவில் இருந்து முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உறிஞ்சப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது

எனவே வெறும் வயிற்றில் காபி அருந்துவதை தவிர்த்து விடுங்கள். தூங்க செல்வதற்கு முன்னரும் காபி அருந்த கூடாது