மன அழுத்தத்தை குறைக்கும் செடிகள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

செடிகளை ஏன் வளர்க்க வேண்டும்

சமையல் தேவைகளை பூர்த்தி செய்யும் செடிகள் கண்ணிற்கு குளிர்ச்சியையும், மனதிற்கு உற்சாகமும் தரும்

மன ஆரோக்கியம்

பொதுவாகவே செடிகளுடன் நேரத்தை செலவிடுவது உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியமான பலன்களை தரலாம்

கார்டிசோலின் அளவைக் குறைக்கும்

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் தாவரங்கள் மனிதர்களின் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் மனநிலைக் கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

துளசி செடி

துளசி செடி ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த துளசி செடியில் மன அழுத்தத்திற்கு எதிரான குணங்கள் உள்ளது

துளசி செடியில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்க பெரிதும் உதவுகிறது

மல்லிகை

மல்லிகைச்செடி கண்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அழகான பூக்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பணியிடம் மற்றும் வீட்டில் உண்டாகும் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் இயற்கை செடி

அழகான மல்லிகை செடி உங்கள் அறையை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் நறுமணம் சுற்றுப்புறத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது

ஸ்நேக் பிளாண்ட்

ஸ்நேக் பிளாண்ட் என்று அழைக்கப்படும் பாம்பு கற்றாழை அலுவலக இடங்களில் வைக்க சிறந்த செடி. மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த தாவரங்களில் ஒன்று

வீட்டில் படுக்கையறையிலோ அல்லது அலுவலக மேசையிலோ இந்த ஸ்நேக் பிளாண்ட் செடியை வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி, சுவாசிக்க புதிய காற்றை வழங்க உதவும்