இந்த பிசியான காலக்கட்டத்தில், பலருக்கும் உடற்பயிற்சி செய்ய அதிக நேரம் இல்லை. எனவே தினமும் காலையில் 15 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் செய்யலாம்
ஸ்கிப்பிங் உடற்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது
பல பெண்கள் தங்கள் எடை அதிகரிப்பதை பற்றி கவலைப்படுகிறார்கள். அரை மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் 1300 கலோரிகளை குறைக்கலாம்
உடல் உறுப்புகளுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி செய்வதற்கு முடியவில்லை என்றால் ஸ்கிப்பிங் செய்யலாம்
குதிக்கும் போது கைகள், கால்கள், வயிறு, கழுத்து என உடலின் ஒவ்வொரு பகுதியும் வேலை செய்கிறது
இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சி ஆகும்
நம் உடலில் இருக்கும் நச்சுகள் நோய்களை உண்டாக்குகின்றன. எனவே அவற்றை உடலில் இருந்து வியர்வை மூலம் அகற்ற ஸ்கிப்பிங் உதவும்
வெறும் வயிற்றில் ஸ்கிப்பிங் செய்வதை தவிர்க்கவும். தளர்வான மற்றும் வசதியான ஆடைகளை அணிந்து செய்யலாம்
மிக உயரமாக குதிக்க வேண்டிய அவசியமில்லை ஆரம்பத்தில் மெதுவாகவும் நேரம் போக போக வேகத்தை சற்று அதிகரிக்கலாம்