பலருக்கும் ஏ.சி இல்லாமல் இருக்கவே முடியாது



கோடைக்காலம் வேறு தொடங்கிவிட்டதா..இனிமேல் ஏ.சி இல்லாமல் மூச்சே வராது



அவ்வாறு அலுவலகம், வீடு, கார் என ஏ.சியிலேயே வாழ்பவர்கள் பலர் உள்ளனர்



நீண்ட நேரம் ஏ.சியில் இருப்பதால் பல பாதிப்புகள் ஏற்படும்



ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும்



எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும்



மூக்கடைப்பு, தலைவலி, காது அடைப்பு ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்



சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகும்



ஏசியின் பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்,அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்



எனவே ஏ.சியை அளவாக பயன்படுத்துங்கள்