காலையில் ஆப்பிள் சைடர் வினிகர் குடித்தால் உடல் எடை குறையுமா?



ஆப்பிள் சைடர் வினிகர், ஆப்பிள் சாற்றைப் புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுவது



ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து காலையில் குடித்தால் உடல் எடை குறையும் என்று பலரும் நம்புகின்றனர்



ஆனால் ஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பதால் மட்டும் உங்கள் உடல் எடை குறையாது



சரிவிகித உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது என அனைத்தும் அவசியம்



ஆப்பிள் சைடர் வினிகரில் மாலிக் அமிலமும் சிறிதளவு சிட்ரிக் அமிலமும் உள்ளது



சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்



எனவே மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை எடுத்து கொள்ள வேண்டாம்



மருத்துவர் கூறும் அளவில் மட்டும் இதனை எடுத்து கொள்வதும் முக்கியம்



குழந்தைகளுக்கு இதனை கொடுக்காமல் இருப்பது நல்லது