உங்கள் வாழ்க்கை துணையிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? காதலர்களுக்குள் ஏதாவது சிக்கல் வந்தால் இருவரும் பேசி முடிவெடுங்கள். இருவரில் ஒருவர் மட்டும் முடிவெடுத்துவிட்டு பேசாதீர்கள் உங்கள் காதல் துணை சந்திக்கும் மோசமான சூழலில் பக்கபலமாக இருங்கள் உங்கள் காதல் துணை அவர்கள் பற்றிய அனைத்தையும் உங்களிடம் ஒரே நாளில் கூறிவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் காதல் உறவின் அடிப்படையில் அன்பு எந்தளவு ஆழமாக இருக்க வேண்டுமோ, அதே அளவு நம்பிக்கை மிக ஆழமாக இருக்க வேண்டும் சின்ன, சின்ன செயல்களாக இருந்தாலும் அவர்களை தட்டிக் கொடுங்கள் உங்கள் காதல் துணையின் உடை, அவர்களது பாவனை, அவர்கள் ஹேர் ஸ்டைல், அவர்களது நடை என ஒவ்வொன்றையும் ரசியுங்கள். அதை அவர்களிடம் சொல்லி பாராட்டுங்கள் உங்களுக்கு பிடித்ததை மட்டுமே உங்கள் காதல் துணை செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள் அது அவர்களை காயப்படுத்துவதுடன், ஒரு கட்டத்தில் உங்களை விட்டு விலகினாலே போதும் என்ற மனநிலையை உருவாக்கிவிடும் நம் கருத்தை சொல்லும்போது அவர்களது மனம் நோகாமல் அதை சொல்ல வேண்டும் ,அதேசமயம் அவர்களது விருப்பம் அதுவேதான் என்றால் அதற்கு சம்மதிக்கவும் வேண்டும்