கார் ஓட்டி பழகுவர்களுக்கான டிப்ஸ்! முதலில் காரின் இருக்கையை உங்களுக்கு ஏற்றது போல் மாற்றிக்கொள்ளவும் ஸ்டியரிங்கை ஒழுங்காக பிடிக்கவும் ஒரே கையை மட்டும் பயன்படுத்தாமல், இரு கைகளையும் பயன்படுத்தவும் கடிகாரத்தை ஸ்டியரிங்காக கற்பனை செய்து கொண்டு 10 உள்ள இடத்தில் இடது கையையும், 2 உள்ள இடத்தில் வலது கையையும் வைக்கவும் காரில் உள்ள ஹார்ன், இண்டிகேட்டரை தேவைப்படும் இடங்களில் நிச்சயமாக பயன்படுத்தவும் மற்றவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கும் படி ஹார்னை பயன்படுத்த வேண்டாம் வண்டியை நிறுத்தும் போது, உங்களுக்கு முன் இருக்கும் காருக்கும் உங்களுக்கும் சற்று இடைவெளி இருப்பதை உறுதி செய்யவும் வண்டியை மீண்டும் இயக்கும் போது, முன்னே உள்ள வண்டியை இடிப்பதற்கான வாய்ப்பு குறையும் படபடப்புடன் வண்டியை இயக்காமல் சற்று ரிலாக்ஸாக இருக்கவும் எதையாவது நினைத்துக்கொண்டு கவனக்குறைவுடன் காரை ஓட்ட வேண்டாம்