காதலில் விழுந்தவர்களிடம் காணப்படும் அறிகுறிகள்! நீங்கள் ஒருவரைப் பற்றி அதிகமாக நினைப்பது என்பது, அவர் மீது அதிகப்படியான அன்பபை செலுத்துவதாலும் இருக்கலாம் நீங்கள் விரும்பும் நபருடன் எப்போதும் இருப்பது போன்று நீங்கள் கற்பனை செய்தால், அது நிச்சயமாக காதல் தான் அவர்களை பற்றி பகல் கனவு காண்கிறார்கள் என்பது காதலுக்கான முதல் அறிகுறியாகும் யாரை நீங்கள் ஸ்பெஷல் என கருதுகிறீர்களோ அவர், உங்கள் அருகில் வந்தாலோ, அல்லது உங்களுடன் பேசினாலோ,நீங்கள் பயமாகவோ அல்லது உற்சாகமாகவோ உணர்வீர்கள் அந்த நபர் உங்களிடம் பேசும்போது ஒருவித பதற்றத்தையும் அடிவயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதையும் உணரலாம் அவர்களைப் பற்றி கூடுதல் தகவல்களை அறிய விரும்புவது ,ஒருநாள் அவர்களை பார்க்காவிட்டாலும், துடித்துப்போவதும் காதலின் வெளிப்பாடு தான் நீங்கள் விரும்பும் நபருடன் யாராவது பேசினாலும், அவர்கள் உங்களைத் தவிர மற்றவர்களுக்கு நேரம் கொடுக்கும்போது உங்களுக்கு பொறாமை பொங்கி வரலாம் மற்றவர்களை விட அந்த நபரைச் சுற்றி இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா? இதுவும் உங்கள் அன்பின் சிறப்பியல்பு இப்போது கூட, இந்த பதிவை படிக்கும் போது நீங்கள் காதலிக்கும் நபர் நினைவில் வரலாம்.. வந்தார்களா? இல்லையா?