இன்ஸ்டண்ட் நூடுல்ஸை ஏன் அடிக்கடி சாப்பிடுவது கூடாது?



சுவையாகவும் உடனடியாக செய்யக்கூடியாதாகவும் இருக்கும் இன்ஸ்டண்ட் நூடுல்ஸை பலரும் விரும்புகின்றனர்



அவற்றில் சோடியம் மற்றும் பிற இரசாயனங்கள் அதிகம் உள்ளன



வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து என எதுவுமே இதில் கிடையாது



மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) என்பது இந்த நூடுல்ஸ் மசாலாவில் சேர்க்கப்படுகிறது



இது எடை அதிகரிப்பு, தலைவலி, குமட்டல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்



இதில் இருக்கும் சோடியம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்



அதிக அளவு மைதாவை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும்



ஆகவே இதை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை உடனடியாக நிறுத்தவும்



ஆசைக்கு எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்