பாதாம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சருமத்திற்கு இயற்கை அழகை தரும் இதை வைத்து எப்படி ஃபேஷியல் செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சந்தன பவுடர், பாதாம் பவுடர், தேன், பால் முதலில் பாதாம் பவுடர் மற்றும் சந்தன பவுடரை சேர்க்க வேண்டும் அதனுடன் தேனை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும் பிறகு பாலை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்க வேண்டும் முகத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கலவையை முகத்தில் தடவ வேண்டும் இந்த கலவையை வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம் காய்ந்த உடன் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்