பருக்கள் வந்த பின் முகத்தில் பள்ளம் விழுவது ஏன்?

Published by: விஜய் ராஜேந்திரன்

பொதுவாக வியர்வை, எண்ணெய் ஆகியவற்றை வெளியேற்றுவதற்கு சரும மேற்பரப்பில் துளைகள் இருக்கும்

ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் மாற்றம் காரணமாக முகத்தில் பருக்கள் ஏற்படும்

சிலருக்கு பருக்கள் நீங்கியதும் முகத்தில் பள்ளங்கள் தோன்றும்

இது உருவாவதற்கு காரணம் நம் முகத்தில் உள்ள துளைகள்தான்

இந்த துளைகள் வழியாக செபாசியஸ் சுரப்பியானது எண்ணெயை வெளியேற்றும்

இந்த துளைகளில் அழுக்குகள் படிந்து துளைகளை அடைக்கும் போது முகப்பரு ஏற்படும்

துளைகளின் அளவு பெரியதாக மாறினால் இதனால் முகத்தில் பள்ளங்கள் ஏற்படுகின்றன

அதிகமாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்த துளைகள் பெரிதாகி சருமத்தில் பள்ளங்களை உருவாக்குகிறது

நாளுக்கு 2 முறை முகத்தை கழுவி சுத்தமாக வைத்திருந்தாலும், சருமத்தில் எண்ணெய் வெளியேறுவதை ஓரளவு கட்டுப்படுத்தலாம்