மூலிகை பொடியின் அற்புத நன்மைகள் ! ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகை பொடிகளை பற்றி இந்த பதிவில் காணலாம் பூலாங்கு கிழங்கு பொடியை உடம்பில் பூசி குளித்து வந்தால் உடலில் நறுமணம் வீசும் கஸ்தூரி மஞ்சள் பொடியை முகத்தில் பூசி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும் வசம்பு பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, குமட்டல் வராமல் தடுக்கலாம் சோற்றுக் கற்றாழை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவாகும் மருதாணி பொடியை தண்ணீரில் கலக்கி கை காலில் பூசி வந்தால் பித்தம் கபம் குறையலாம் கருவேலம்பட்டை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையலாம்