அக்குளில் உள்ள கருப்பு திட்டுகளை போக்க எளிய டிப்ஸ் இதோ!

Published by: விஜய் ராஜேந்திரன்

அக்குள் கருமையடைவது ஒரு பொதுவான பிரச்சனையாகும்

ஆனால் ஸ்டைலாக ட்ரெஸ் செய்து கொள்பவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது

கறுப்பு அக்குள் காரணமாக அவர்கள் தங்கள் விருப்பப்படி ஆடைகளை அணிய முடியாது

இதனை போக்க கற்றாழை ஜெல் மற்றும் சந்தனப் பொடியை ஒரு பாத்திரத்தில் கலக்கவும்

கலவையை அக்குள்களில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்

பால் மற்றும் காபி பவுடரை நன்கு கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்

இந்தக் கலவையை அக்குள்களில் தடவி மெதுவாக மசாஜ் செய்து 5-10 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

தயிர் மற்றும் மஞ்சள் தூள் நன்கு கலக்கவும்

அக்குள்களில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

தேன் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்

அக்குள்களில் தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்து 5-10 நிமிடங்களுக்குப் பிறகு அக்குளை கழுவவும்

சந்தன தூள், முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும்

பேஸ்டை அக்குள்களில் தடவி 15-20 உலர்த்திய பின், குளிர்ந்த நீரில் அக்குள்களை கழுவவும்

எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்

அக்குள்களில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும்

பேஸ்ட்டை அக்குள்களில் தடவி 10 நிமிடம் விட்டு குளிர்ந்த நீரில் அக்குள்களை கழுவவும்