அண்ணன் - தங்கை உறவை போற்றும் விதமாக வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது
ரக்ஷா பந்தனானது ஷ்ரவண் மாதத்தில் வழக்கமாக கொண்டாடப்படுகிறது. அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி நன்னாளில் ரக்ஷா பந்தன் வழக்கமாக கொண்டாடப்படும்
இந்தாண்டில் ஷ்ரவண் மாத பௌர்ணமி வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வருகிறது
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்களது சகோதரர்களின் கையில் ராக்கி கயிறு கட்டிவிடுவது வழக்கம் ஆகும்
தங்களை பாதுகாக்கும் நபர் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் ராக்கி கயிறு கட்டப்படுகிறது. மேலும், ரக்ஷா பந்தன் தினத்தில் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டுவதுடன், அவர்களின் நெற்றியில் திலகமிடுவது வழக்கம்
ரக்ஷா பந்தன் கொண்டாட ஆகஸ்ட் மாதம் 1.30 மணி முதல் இரவு 9.08 மணி வரை உகந்த நேரம் ஆகும்
திரௌபதியை சபையில் அவமானப்படுத்தும்போது கிருஷ்ணர் தோன்றி அவரை காப்பாற்றுவதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதை நினைவு கூறும் விதமாகவும், அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாகவும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது